Categories
தேசிய செய்திகள்

மதம் என பிரிந்தது போதும்…. மனிதம் ஒன்றே தீர்வாகும்…. சீக்கியர் செயலுக்கு குவியும் பாராட்டு..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் விபத்தில் சிக்கிய ஒருவருக்கு சீக்கியர் உதவிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பல இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், சீக்கியர்கள், பௌத்தம் என பல பல மதங்களும், அந்த மதங்களை பின்பற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆயிரம் வேற்றுமை இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு இந்தியா என்பதற்கிணங்க, அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக பெரும்பாலும் பழகி வருகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் கலவரங்களில் அடித்துக் கொள்கிறார்களே தவிர, மற்றவர்கள் அப்படி அடித்துக்கொள்வது கிடையாது.

சண்டையிடும் சிலரும் அதற்குப் பின்னால் ஒரு அரசியல் பின்புலம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொண்டால், அந்த கலவரம் கூட வராது ஒருவரை ஒருவர் வெறுக்க மாட்டார்கள். அந்த வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு விபத்தின் போது தலையில் பலத்த காயம் அடைந்த ரிக்ஷா ஓட்டுநர் ஒருவருக்கு சீக்கியர் ஒருவர் தன்னுடைய தலையிலுள்ள டர்பனை கழற்றி தலையில் சுற்றி முதலுதவி அளிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பொதுவாக சீக்கியர்கள் தங்களது தலையில் உள்ள டர்பனை எந்த சூழ்நிலையிலும் பொதுஇடத்தில் கழட்ட மறுப்பார்கள். அப்படியிருக்கையில் இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் மதத்தை விட மனிதநேயம் தான் எப்போதும் பெரிது என்று தெரிவித்ததுடன், அவர்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இனம் என பிரிந்தது போதும், மதம் என பிரிந்தது போதும், மனிதம் ஒன்றே தீர்வாகும் என்ற பாடலுடன் வீடியோ வைரலாகி வருகிறது.

Categories

Tech |