மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள கூத்தியார்குண்டில் ஆஸ்டின்பட்டி பகுதியில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் புறநகர் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டு, சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வைத்துள்ளனர். மேலும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.