கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அலுவலகங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
- 65 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், கற்பிணிப் பெண்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
- எச்சில் துப்புவது முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
- பணியாளர்கள் அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
- ஆலோசனை கூட்டங்களை நேரிடையாக நடத்தாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த அறிவுறுத்தல்
- அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் சோதனை மற்றும் கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவிய பிறகு பணியாளர்களை அனுமதிக்க வேண்டும்
- ஒரு பணியாளர் அல்லது 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அலுவலகத்தை மூட வேண்டிய அவசியம் இல்லை
- அதிகளவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கிருமி நாசினி தெளித்து 2 நாட்கள் அலுவலகத்தை மூட வேண்டும்.
- நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இருந்து வருபவர்களை அலுவலகத்தில் அனுமதிக்க கூடாது, வீட்டில் இருந்து பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.