Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் தொழிற்சாலைகள் இயங்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில்,

  • முதல் வாரம் ஆலையின் ஒட்டு மொத்த கொள் திறனுக்கு உற்பத்தி செய்ய கூடாது.
  • தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதும் முதல் வாரத்தை முன்னோட்டமாக எடுத்து கொள்ள வேண்டும்.
  • முதல் வாரம் முழுவதும் சோதனை முறையில் ஆலையை இயக்க வேண்டும்.
  • தொழிசாலை உபகரணங்களில் கசிவு ஏற்படுவதை தடுக்க முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.
  • தொழிற்சாலைகளுக்குள் ஊழியர்கள் நுழையும் போடு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும்.
  • ஒருவர் பயன்படுத்திய கருவியை மற்றொருவர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • அனைத்து உபகரணங்கள் , கருவிகள், வாயு கசிவு உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளில் அதிக உற்பத்திக்கான முயற்சியை தற்போது எடுக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |