Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பு – மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில்,

மால்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் :

  • மால் நுழைவு வாயில்களில் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் இருக்க வேண்டும்.
  • அறிகுறி இல்லத்தவர்கள் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
  • முக கவசம் பயன்படுத்தினால் மட்டுமே மாலில் நுழைய அனுமதி.
  • கொரோனா தடுப்பு விழிப்புணர்வை பரப்புவதற்கான ஆடியோ மற்றும் வீடியோ தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும்.
  • குறிப்பிட்ட கால இடைவெளியில் கழிவறைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
  • குழந்தைகள் விளையாடும் இடங்கள் மூடப்படும், திரையரங்குகளுக்கு அனுமதியில்லை.
  • ஷூக்கள் மற்றும் காலணிகளை சொந்த வாகனத்திற்குள் வைத்துவிட்டு வர வேண்டும்.
  • வாகன நிறுத்துமிடங்களிலும் சமூக தொலைதூர விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
  • மின்விசிறி , ஏசி பயன்பாட்டின் போது வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.
  • கடைகள் ஸ்டால்கள் ஹோட்டல்களில் பொதுமக்கள் வரிசையாக நிற்கும் போது சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
  • நிர்வாக மேலாண்மை பணியாளர்கள் முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |