இங்கிலாந்து அரசு, இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட இந்திய மக்களுக்கு பயண கட்டுப்பாடில் தளர்வுகள் அறிவித்திருக்கிறது.
இங்கிலாந்து அரசு, விதித்திருந்த சர்வதேச பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய இந்திய மக்கள் இங்கிலாந்திற்கு வரும் பட்சத்தில், பிசிஆர் பரிசோதனைகள் செய்து கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. இந்த தளர்வு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மேலும், இங்கிலாந்து அரசு, சிவப்பு, ஆம்பர் மற்றும் பச்சை போன்ற அடிப்படையில் பயண கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியிருந்தது. இதில், இந்தியா ஆம்பர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது. அதாவது சிவப்பு மற்றும் ஆம்பர் பட்டியலில் இருக்கும் நாட்டு மக்கள் இங்கிலாந்திற்கு, வர பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்த கட்டுப்பாடுகள், சிவப்பு பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு மட்டும் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.