பிரிட்டனில் பொது முடக்கம் குறித்து முக்கிய தகவல்களை பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ளார்.
நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பும் ஒரு முயற்சியாக பொதுமக்கள் மற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக வெளியிடங்களில் பிக்னிக் போன்ற ஏற்பாடுகளை செய்து சந்திக்கலாம் என்று தெரிவிதுள்ளார். தற்போது உடற்பயிற்சி செய்வதற்காக மட்டுமே வேறொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் டென்னிஸ் மற்றும் கோல்ப் மைதானங்கள் மூடப்பட்டுள்ளது. இது அடுத்த மாதங்களில் திறக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக பொது முடக்கத்தை விளங்கிக் கொள்வது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் கேபினட் மற்றும் அறிவியல் ஆலோசகர்களை சந்தித்து பேச உள்ளார். அதன்பின் அவர் மக்களிடம் உரையாற்றுவார்.
மார்ச் 8 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று ஜான்சன் பேசியிருந்தார். ஆனால் நாடு சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகே பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிகள் மீண்டும் திறந்தாள் கொரோனா பரவல் அதிகம் ஆகலாம் என்று மருத்துவம் நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.