Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சொந்தக்காரன் பண்ணுற வேலையா இது…? வசமாக சிக்கியவர்…. கைது செய்த காவல்துறையினர்…!!

முன்விரோதம் காரணமாக உறவினர் காருக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள குவளைக் கண்ணி கிராமத்தில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேத்தூர் பகுதியில் இருக்கும் தனது தென்னந்தோப்பு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் தென்னந்தோப்புக்கு சென்றுவிட்டு ரூபன் திரும்பி வந்து பார்த்த போது அவரது கார் தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேத்தூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரூபனின் பெரியம்மாவின் மகனான கருப்பையா என்பவர் காருக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கருப்பையாவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தபோது, ரூபாவிற்கும், அவருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்ததால் காருக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார். அதன்பின் காவல்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கருப்பையாவை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |