Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடு – மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் மளிகை கடைகள் செயல்பட வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆக இருந்து வருகிறது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் திடீரென்று வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 45 வயது முதியவர் ஒருவர் திடீரென்று கொரோனா பாதிக்கப்பட்டதால் உயிரிழந்தார். இவர் வெளிநாட்டிற்கும்,  வெளி மாநிலத்துக்கும் செல்லாத நிலையில் எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியாமல் மாவட்ட நிர்வாகம், பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டமாக சமூக பரவலான வந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் குறிப்பிட்ட பகுதிக்கு 200 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுக்களை அனுப்பி கிருமிநாசினி தெளித்து, நோய் தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டார். அதேபோல் இவர் பழகிய நபர்கள் யார் ? அவருடைய உறவினர்கள் யார் ? என்பதை அடையாளம் கண்டு வருகிறார்கள்.

ரூ1,00,00,000 ஒதுக்கீடு….. வேலையெல்லாம் ...

தற்போது வரைக்கும் ஐந்து நபர்கள் இவருடன் பழகியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆகியவை வாரத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்ட்டுள்ளது.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ...

இதுதவிர காய்கறி கடைகள் பெட்ரோல் பங்குகள் தினமும் மாலை 6 மணி முதல் 10 மணி வரையும்,  பால் விற்பனை காலை 6 மணி முதல் 8 மணி வரையும் அதே போல மாலை 5 முதல் 7 மணி வரை நடைபெறலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.மருந்தகங்களுக்கு கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது வழக்கம் போல் செயல்படும், அதே போல் அனைத்து வகை இறைச்சி கடைகளை ஊரடங்கு உத்தரவும் முடியும் வரை தொடர்ச்சியாக தடை விதிக்கப்படம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |