தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், அண்மையில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு மருத்துவ ரீதியாக பிரச்சனை இருப்பின் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன பிறகு தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மேற்கண்ட எந்த ஒரு விதிமுறைகளையும் நயன்தாரா பின்பற்றவில்லை என புகார்கள் எழுந்தது.
இதன் காரணமாக தமிழக அரசின் சார்பில் 3 பேர் கொண்ட குழு நயன்தாரா-விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி தங்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பாகவே பதிவு திருமணம் நடந்ததாகவும் அதற்கான சான்றிதழை விசாரணை குழுடம் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதோடு ஜனவரி மாதம் வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறைக்கு தாங்கள் பதிவு செய்துள்ளதாகவும் நயன்-விக்கி தம்பதி தரப்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடகைத்தாய் பிரச்சனையானது ஓரளவு அடங்கிய நிலையில், நயன்தாராவை இணையதளத்தில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்குகின்றனர்.
அதாவது நயன்தாராவுக்கு 6 வருடங்களுக்கு முன்பாக பதிவு திருமணம் நடைபெறவில்லை என்றும், தற்போது இரட்டை குழந்தை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் காரணமாக போலி சான்றிதழை பணம் கொடுத்து வாங்கியுள்ளதாகவும் நெட்டிசன்கள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அதோடு எவ்வளவு பணம் கொடுத்தீங்க நயன்தாரா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பதிவுகளை பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனர். அதாவது நயன்தாரா எதற்காக பொய் சொல்ல வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக ஆறு வருடங்களுக்கு முன்பாகவே பதிவு திருமணம் நடந்திருக்கலாம் என்கின்றனர். மேலும் நயன்தாரா மற்றும் விக்கியின் பதிவு திருமணம் தொடர்பான மீம்ஸ்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.