உத்திரப்பிரதேச மாநிலத்தில் மனைவி உல்லாசத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொலை செய்தது மட்டும் இல்லாமல் குழந்தைகளை கால்வாயில் வீசி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலம், பாசேதி கிராமத்தை சேர்ந்த பப்புகுமார் என்பவரின் மனைவி டோலி. இவர்களுக்கு சோனியா(5), வான்ஷ்(3) மற்றும் ஹர்ஷிதா(15 மாதம்) என்று மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 நாளாக டோலி கணவருடன் உல்லாசமாக இருக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பப்பு குமார் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
அது மட்டுமில்லாமல் தாயில்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று நினைத்து உயிருடன் குழந்தைகளை கால்வாயில் வீசி எறிந்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த பப்பு குமாரை தீவிரமாக தேடி காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.