தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைக்கான ரேசன் அரிசி குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசியும், 2 நபர்கள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என மத்திய அரசு கொண்டு வந்ததன் அடிப்படையில் ஒரு நபர் குடும்ப அட்டைக்கு 7 கிலோ அரிசியும், 2 பேர் குடும்ப அட்டைக்கு 12 கிலோ அரிசி வழங்கப்பட்டது. தமிழக அரசு இந்த சட்டம் வந்த பிறகும்கூட தொடர்ந்து பழைய அளவிலே அரிசி கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது அந்த அரிசியின் அளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கடைகளில் ஒரு நபருக்கு 7 கிலோ அரிசி மட்டும் தான் வழங்கப்படுகிறது. 2பேர் குடும்பத்துக்கு 12 கிலோ அரிசி மட்டும் வழங்கபடுகிறது. இது குறித்து அதிகாரிகள் பேசும் போது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மத்திய அரசின் தொகுப்பும் சார்பாக ஒரு நபருக்கு 5 கிலோ கூடுதலாக வழங்கி வருகிறோம்என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.