Categories
டெக்னாலஜி பல்சுவை

”ஐபோன்களின் விலை குறைப்பு” இந்தியாவில் நல்ல வரவேற்பு – டிம் குக் பெருமிதம்.!!

ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின்  விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும்  ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”
 Related image“இந்தியா மிக முக்கியத்துவம் வாய்ந்த சந்தையாகும். குறுகிய காலத்திற்கு இந்த சந்தை மிகவும் சவால் மிக்கதாக இருக்கிறது. எனினும், இந்த காலக்கட்டத்திற்குள் நாங்கள் அதிகம் கற்றுக் கொள்கிறோம். இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு துவங்கிருக்கிறோம். இதன் மூலம் இங்கு வியாபாரத்தை சிறப்பான முறையில் செய்ய முடியும். மேலும் எங்களது வளர்ச்சி இங்கு அபாரமாக இருக்கிறது.”

Related image

இதுதவிர, “இந்தியாவில் சில்லறை விற்பனை மையங்களை தொடங்குவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு அனுமதி பெறுவதற்கு அரசாங்கத்துடன் பணியாற்றி வருகிறோம். இத்துடன் டெவலப்பர், அக்செல்லரேட்டர் ஒன்றையும்  திறந்திருக்கிறோம். இது நீண்ட நேர திட்டமாகும். இதன்  மூலம் கிடைக்கும் வளர்ச்சி மிகவும் அபாரமானதாக இருக்குமென என அவர் தெரிவித்தார்.

Related image

முன்னதாக 2019 ஆண்டின் 2 வது காலாண்டு வருவாய் அறிக்கையினை  ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. அதன்படி  2வது காலாண்டு காலத்தில் 5,800 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 4,00,000 கோடி) வருவாயை  ஈட்டியிருக்கிறது. இந்த வருவாயை  முந்தைய ஆண்டு வருவாயுடன்  ஒப்பிடு செய்யும்  போது 5 சதவிகிதம் சரிவாகும். வருடாந்திர அடிப்படையில் கணக்கிடும் போது  15.94 சதவிகிதம் குறைவு ஆகும்.

Related image

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டின் 3 வது காலாண்டு காலத்தில் 5250 கோடி டாலர்கள் முதல் 5450 கோடி டாலர்கள் வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றது. இதில் நிறுவனத்தின்  நிர்வாக செலவீனம் 870 கோடி டாலர்கள் முதல் 880 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

Categories

Tech |