இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்னதாக M1908C3IC என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை பெறாத நிலையில் கேமரா மட்டும் வித்தியாசமாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஸ்கிரீன், 156.3×75.4×9.4mm, 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 2 ஜி.பி. / 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 , டூயல் சிம் ஸ்லாட் , இதில் புகைப்படம் எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ் 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமராவும் ,
செல்ஃபி எடுக்க 8 எம்.பி கேமரா மற்றும் கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் ,18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் ரூ. 7,999 என்பதால் ரெட்மி 8 விலையும் இதே போன்று நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.