ஆண்ட்ராய்டு போன்களை ‘சோவா ஆண்டிராய்டு ட்ரோஜன்’ வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளதாக அரசின் CERT அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ் உங்கள் போனில் உள்ள ஸ்க்ரீன்ஷாட், வீடியோ, வங்கி & க்ரிப்டோ செயலிகள் உள்ளிட்டவற்றில் உள்ள விவரங்களை ‘ஹேக்’ செய்துவிடும். ஆகவே, ‘பிளே ஸ்டோர்’-ல் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும், மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யக்கூடாது என்றும் CERT அறிவுறுத்தி உள்ளது.