Categories
டெக்னாலஜி பல்சுவை

”கெத்தா நடந்து வரான்” ரெட்மி நோட் 8 ….!

ரெட்மி நிறுவனம் தனது அடுத்த மாடலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபலை வெளியிட்டுள்ளது.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நிறுவனம் பட்ஜெட் செக்மென்டில் தனது அடுத்த பாய்ச்சலாக ‘ரெட்மி நோட் 8’ என்ற புதிய மொபைல் மாடலை வெளியிட்டுள்ளது.

  • 6.39 இன்ச் IPS எல்இடி டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • 48 மெகாபிக்சல் கேமரா+ 8 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 13 மெகாபிக்சல் வாட்டர் டிராப் கேமரா
  • 4,000mah பேட்டரி
  • 18w ஃபாஸ்ட் சார்ஜ் வசதி
  • பாதுகாப்புக்கு முன்புறமும் பின்புறமும் கொரில்லா க்ளாஸ் 5
  • வெள்ளை, கறுப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கவுள்ளது.

இந்த ரெட்மி நோட் 8 மொபைல் ஆண்ட்ராய்டு 9 பை-ஐ மையமாக வைத்து ரெட்மி உருவாக்கிய MIUI 10 இயங்குதளத்தை கொண்டு இயங்குகிறது. ஆனாலும் MIUI 11-இன் அப்டேட் மிக விரைவில் (நவம்பர் 13-29) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4GB RAM + 64GB சேமிப்புத் திறனைக்கொண்ட இந்த Redmi note 8 ஸ்மார்ட்போன் ரூ.9,999-க்கும் 6GB RAM + 128GB சேமிப்புத் திறனைக்கொண்ட ஸ்மார்ட்ஃபோன் ரூ.12,999க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்ஃபோன் வரும் அக்டோபர் 21ஆம் தேதி முதல் அமேசான், எம்.ஐ. தளங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.

Categories

Tech |