Categories
பல்சுவை

செஞ்சிலுவை சங்கத்தின் உன்னத பணிகள்….!!

உலக செஞ்சிலுவை சங்கம் தனது முயற்சியினால் போர் நடைபெறும் இடங்களுக்கும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. இது சர்வதேச நாடுகளின் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாக செயல்படுகிறது. போர்க்காலங்களில் நாடுகளிடையே கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகளையும் இந்த  அமைப்பு கண்காணித்து வருகின்றது.

போரிடும் நாடுகள் உரிமையை மீறி நடந்து கொண்டாள் இந்த அமைப்பு மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரும்.ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் பல நாடுகள் கடந்து ஒரு மனிதனின் உயிரை காப்பாற்றும் கடவுள் போன்று செஞ்சிலுவை அல்லது செம்பிறை சங்கத்தின் பணிகள் இருந்து வருகின்றன.

முதலில் இந்த அமைப்புகளில் 15 நாடுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது செஞ்சிலுவை சங்கத்தில் 192 நாடுகள் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். சுகாதார சேவை, முதலுதவி சேவை, நிவாரணம், மருத்துவ சேவை என பல மனிதாபிமான சேவைகளை அந்நாட்டின் அரசுடன் இணைந்து செய்து வருகின்றது செஞ்சிலுவை சங்கம்

Categories

Tech |