பிரபல செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் இடம்பெறாததால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் ஆதி மற்றும் பார்வதியின் ரொமான்ஸ்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
ஆனால் செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் இந்த சீரியலை விட்டு சில நாட்களுக்கு முன்பு விலகினார். இதைத்தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் தற்போது அக்னி என்பவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் டிஆர்பி தொடர்ந்து டாப் இடத்தில் இருந்து வந்த செம்பருத்தி சீரியல் சமீபகாலமாக டிஆர்பி பட்டியலிலேயே இடம்பெறவில்லை. ஏனென்றால் கார்த்திக் ராஜ் இச்சீரியலை விட்டு விலகியதால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆகையால் தான் செம்பருத்தி சீரியல் தற்போது இந்நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் குழுவினர் வருத்தத்தில் உள்ளனர்.