Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு ரெட் அலர்ட் – அடுத்த எச்சரிக்கை …!!

தமிழக, புதுச்சேரி கடற்பகுதிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக, புதுச்சேரி கடற்பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் பதினொரு கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆறு மணி நேரத்தில் அதி தீவிர புயலாக நிவர் புயல் மேலும் வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |