Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு… மதகுகளை சீரமைக்கும் பணி தீவிரம்… அதிகாரிகளின் ஆய்வு…!!

மருதாநதி அணையில் 2 கோடி ரூபாய் செலவில் மதகுகளை சீரமைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் மருதாநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மதகுகள் அமைக்கப்பட்டு 40 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனால் அணையின் அமைக்கப்பட்ட மதகுகள் துருப்பிடித்து அரிப்பு ஏற்பட்டு, தற்போது தண்ணீர் கசிந்து வருகின்றது. இந்நிலையில் அதிகாரிகள் மதகுகளை சீர் அமைப்பதற்காக நபார்டு வங்கியில் 2 கோடி ரூபாய் கடன் உதவி  பெற்றுள்ளனர்.

இதனை அடுத்து மருதாநதி அணையில் இருக்கும் மதகுகளை சீர் செய்யும் பணி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அணையின் முழு கொள்ளளவு நீர் இருப்பதால் மாற்று மதகுகளும் அமைக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் பல அதிகாரிகள் அணையை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |