Categories
சினிமா தமிழ் சினிமா

ஜப்பானில் அங்கீகாரம் பெற்ற அசுரன்…. தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ஜப்பானில் அங்கீகாரம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “அசுரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

குறிப்பாக தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற படமாக அசுரன் திகழ்கிறது. இதனால் இப்படம் “நாரப்பா” என்ற பெயரில் தெலுங்கில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ஜப்பானின் ஓசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக அசுரன் படம் தேர்வாகியுள்ளது.

மேலும் சிறந்த தமிழ் பட பிரிவிலும் அசுரன் படம் இடம் பெற்றுள்ளது. இந்த விழா ஜப்பானில் வரும் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஜப்பானில் அசுரன் படம் அங்கீகாரம் பெற்று இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |