நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சந்திர கிரகணத்தின் பொழுது கோவில்களை மூடுவது இந்துக்களின் வழக்கம். திருப்பதியில் கூட 5 மணி நேரம் மட்டுமே கிரகணத்தின்போது கோவில் திறந்திருக்கும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. சந்திரகிரகணத்திற்கும் கோவில்களை மூடுவதற்கும் என்ன தொடர்பு. கோவில் என்பது வெறும் சிலைகளும் மண்டபங்களும் கொண்டது மட்டும் இல்லை.
அங்கு நன்மை தரக்கூடிய நேர்மறை சக்திகள் அதிகம் நிறைந்திருக்கும் . எனவேதான் கோவிலுக்குள் சென்றால் அமைதியாக இருக்கின்றது மனது சாந்தம் அடைகின்றது என பலரும் சொல்கின்றனர். ஆனால் கிரக நாட்களின் பொழுது அது சூரிய கிரகணம் ஆனாலும் சரி சந்திர கிரகணம் ஆனாலும் சரி அந்த நாட்களில் அதிகப்படியான எதிர்மறை சக்திகள் தான் வெளிவரும். அவ்வாறு வரும் எதிர்மறை தாக்கங்கள் கோவிலின் உள்ளே சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான் கோவிலின் வாசல் சாத்தப்படுகிறது.
அதோடு ஆலயங்களின் மூலவேரின் வீரியம் இவ்வாறு வெளிவரும் எதிர்மறை தாக்கத்தினால் குறைந்து விடக்கூடாது என்பதற்காக துளசி இலைகள் கொண்டு அலங்காரம் செய்வார்கள். துளசி இலைகள் பயன்படுத்துவதற்கு முக்கியகாரணம் அவற்றிற்கு கதிர்வீச்சுகளை உறிஞ்சும் ஆற்றல் அதிகம் உள்ளது. இவ்வாறு இருக்க கிரகண நாட்களில் காளகஸ்தி கோவிலை மட்டும் மூடுவது கிடையாது. இதற்கு காரணம் இங்கே மட்டும்தான் கேதுவுக்கும் ராகுவுக்கும் பூஜை நடைபெறுகின்றது. அதனால் கிரகணத்தின் தாக்கம் இருக்காது என சொல்லப்படுகின்றது.