பல குற்றங்களை செய்து வந்த குற்றவாளி ஒருவர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்
கனடாவில் இருக்கும் வான்கோவர் நகரில் ஆபத்து நிறைந்த பாலியல் குற்றவாளி வசித்து வரும் நிலையில் காவல்துறையினர் அவர் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளனர். 28 வயது இளைஞனான ஹாவார்ட் தான் செய்த அனாகரிக செயல்களுக்காகவும் வன்கொடுமை குற்றத்திற்காகவும் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் அவர் குறித்து கூறுகையில் “ஹாவார்ட் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டுபண்ணும் நபராகவே இருந்தார். அதிலும் போதைப்பொருளை அவர் பயன்படுத்தினால் அது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
பல நிபந்தனைகளுடன் வான்கோவர் நகரில் வசிப்பதற்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதில் முக்கியமானது வெடிபொருட்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு அவருக்கு அனுமதி இல்லை. அதோடு அவருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை மறுக்காமல் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் வசிக்கும் அதே பகுதியில் வசிப்பவர்கள் ஹாவார்ட் நிபந்தனைகளை மீறுவதை கண்டால் உடனடியாக 911 என்ற எண்ணிற்கு அழைத்து தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.