சீனாவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரக்ளுக்கு சிகிச்சை அளிக்க செவிலியர்கள் செய்யும் தியாகம் உலக மக்களை வியக்க செய்கிறது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ்க்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அந்நாட்டு அரசின் மருத்துவர்களையும் குறிப்பாக செவிலியர்கள் அதிதீவிரமாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் சேவை வழங்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய தியாகத்தை அந்நாட்டிலுள்ள செவிலியர்கள் செய்து வருகின்றனர்.
அவர்கள் நாள் ஒன்றுக்கு வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்குகின்றனர். உயிரை பணயம் வைத்து மாஸ்க் அணிந்து கொண்டு 24 மணி நேரமும் சுற்றுவதால் தோள்களில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டு வெளிறிய நிறத்துடன் காட்சி அளிக்கின்றன.
இவை அனைத்தையும் அவர்கள் சம்பளத்திற்காக செய்யாமல் மனிதர்களைக் காக்கும் சேவையாக கருதி செய்கின்றனர். மருத்துவச் சேவையுடன் மனிதனைக் காக்கும் இவர்களுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் வெறும் வார்த்தைகளால் கூறினால் போதாது.