Categories
அரசியல் மாநில செய்திகள்

மன்னிப்பு கேட்க ரெடி…! என்ன மன்னிப்புனு சொல்லுடா லூசு ? H Rajaவுக்கு பதிலடி கொடுத்த A Raja ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு,  ராகுல் காஸ்ட்ரோ  ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.

இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் அல்ல” மன்னிப்பு கேட்பது என்பது மனித மாண்பு.  நான் மன்னிப்பே கேட்க மாட்டேன் என்று சொன்னால் அவனை விட முட்டாள், அவனைவிட வறட்டுத்தனமான அயோக்கியன் எவனும் இல்லை. யார் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் மன்னிப்பு கேட்க தயார். என்ன மன்னிப்பு னு சொல்லூடா லூசு ? என்ன சொன்னேன் நானு.. ரொம்ப நல்ல விவாதம் எல்லாம் வைக்கிறாங்க.

இந்த திருப்பதி நாராயணன் என ஒரு ஆளு,  மதிக்கிறேன். ஒரு நல்ல விவாதம் வச்சாரு.  இந்து மதத்தில் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனா இப்போ அந்த இந்து மதம் இல்ல. அம்பேத்கர் இந்து சட்டம் கொண்டு வந்தது பிறகு ராஜா சொல்றது பொருந்தாது, வேணும்னே சொல்றாரு. அது இந்து மதத்தை இழிவுபடுத்துது. பாக்குறதுக்கு சரியா இருக்கு. இல்லன்னு சொல்லல என தெரிவித்தார்.

Categories

Tech |