Categories
உலக செய்திகள்

தலீபான்களை எதிர்த்து போரா?…. சூளுரைத்த முன்னாள் ராணுவ தளபதி…!!!

முன்னாள் ராணுவ தளபதி, ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களை எதிர்த்து புதிதாக போர் ஆரம்பமாகும் என்று கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதிலிருந்து, அங்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த ராணுவத்தின் அனைத்து மூத்த அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் நாட்டிலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அதன்படி, லண்டனில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலீபான்களை எதிர்த்து புதிதாக போர் உருவாகும் என்று கூறியிருக்கிறார். முன்னாள் ராணுவ வீரர்களுடனும் அரசியல்வாதிகளுடனும் போர் தொடங்க  தயாராகி கொண்டிருப்பதாகவும், ரமலான் பண்டிகைக்கு பின் போரை தொடங்கவுள்ளோம் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், நாடு தலீபான்களிடமிருந்து விடுதலை செய்யப்படுவதையும், ஜனநாயக அமைப்பு மீண்டும் நிறுவப்பட வேண்டும் என்பதையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். தலீபான்களை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், நாடு அனைவருக்கும் உரியதாக வேண்டும், ஆப்கானிஸ்தான் தலீபான்களுக்கானதாக மட்டும் இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |