Categories
அரசியல்

தமிழகத்தில் மீண்டும் அனுமதி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய ஆறு ஏழு மாதங்களாக பொதுமக்கள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுக்கான உத்தரவுகளை பிறப்பித்தது. படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்கப்பட்டு வருகின்றன.

இதனால் நாடு முழுவதும் திரையரங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்னும் திரையரங்கம் திறக்காமலே இருந்து வருகிறது.  தீபாவளி பண்டிகை வருவதால் புதிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் திரையரங்கு எப்போது திறக்கும் ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும், பொது மக்களிடையேயும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில்தான் தமிழக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பண்டிகை காலங்களில் திரைப்படங்கள் வெளியிட அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பு குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்றும், இது குறித்து நாளை நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் ஆலோசனை நடத்துவார் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |