பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி அணி பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின .இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது .இதில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 58 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி , ஹென்றிக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர் .இதன் பிறகு 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல்-மயங்க் அகர்வால் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் கே.எல்.ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, மயங்க் அகர்வால் 57 ரன்னில் வெளியேறினார். இதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்து தோல்வியடைந்தது .இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.