ரெப்போ வட்டி விகிதம் 4.04 சதவீதத்தில் இருந்து 4% ஆக குறைக்கப்படுகிறது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகப்பொருளாதாரம் 13% முதல் 32% வரையிலான அளவிற்கு சுருங்கக்கூடும் என தகவல் அளித்துள்ளார் . உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி அச்சம் என கூறிய அவர்,
உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரித்துள்ளார். ஜிடிபி சிறிதளவு கூட வளர்ச்சி ஏற்படும் சூழல் இந்த நிதியாண்டில் இல்லை எனதெரிவித்துள்ளார். மேலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும், மாநிலங்களுக்கான நிதிப்பிரச்னைகளை சரிசெய்யவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என்றும் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் வழங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.