Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்…. காப்பற்றிய ஹீரோ…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

ரயில் தண்டவாளத்தில் சக்கர நாற்காலியுடன் தவறி விழுந்த நபர் உயிர் தப்பித்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மான்ஹாட்டன் நகரில் Union Square என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கு அருகே சக்கர நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். இதனையடுத்து ரயில் வர சிறிது வினாடிகளே இருக்கும் நிலையில் திடீரென சக்கர நாற்காலியில் இருந்தவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அப்பொழுது அவரின் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் தண்டவாளத்தில் குதித்து அவரையும் அவரது சக்கர நாற்காலியையும் மேலே ஏற்றி தானும் மேலே ஏறினார்.

இந்த சம்பவமானது ரயில் நிலையத்திலிருந்த அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சில வினாடிகளிலேயே ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழைந்தது. இதனை தொடர்ந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்த நபரை காப்பாற்றியவர் தனது பெயரைக் கூட சொல்லாமல் அமைதியாக சென்று விட்டார். அவரை அங்கிருத்த மக்கள் அனைவரும் ‘ஹீரோ’ என்று புகழ்ந்துள்ளனர். அதிலும் ரயில் தண்டவாளத்தில் விழுந்தவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |