Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தடம்புரண்டு ஓடிய ரயில்….. துரிதமாக செயல்பட்ட என்ஜின் டிரைவர்…. தவிர்க்கபட்ட பெரும் விபத்து…!!

பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் பெட்டி தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஜங்ஷன் கிராப்பட்டி பாலம் அருகில் இருக்கும் ரயில்வே யார்டில் இருந்து 18 பெட்டிகளுடன் ரயில் ஒன்று பராமரிப்பு பணிக்காக சென்னை பெரம்பூர் நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லை. இந்நிலையில் ஒரு பெட்டியின் 4 சக்கரங்கள் எதிர்பாராதவிதமாக தடம் புரண்டு தண்டவாளத்திற்கு கீழே இறங்கி ஜல்லி கற்கள் மீது சிறிது தூரம் ஓடியுள்ளது.

இந்த சத்தம் கேட்டவுடன் என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தி விட்டு உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுமார் 2 மணி நேரம் கழித்து ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அந்த சமயம் ரயிலில் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |