சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் முதல் கட்டமாக மகளிர் சிறையில் உள்ள சங்கரின் கள்ளக்காதலி ராணியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஏற்கனவே மகளிர் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிய நிலையில் புழல் சிறையில் உள்ள திலிப் குமார் மற்றும் தினகரன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர்.