Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலை சிற்றுண்டிக்கு “ரவா இட்லி”

தேவையான பொருட்கள்

ரவை                           –  1 கப்

எண்ணெய்               –  4 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை      –  சிறிதளவு

கடலைப் பருப்பு    –  2 டேபிள்ஸ்பூன்

உப்பு                            –  தேவைக்கேற்ப

தயிர்                           –  ஒரு கப்

கடுகு                           –  ஒரு டீஸ்பூன்

மிளகாய்                    –  3

பட்டாணி                  –  ஒரு கப்

 

செய்முறை

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு, மிளகாய், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதனுடன் பச்சை பட்டாணியையும் ரவையையும் சேர்த்து நன்றாக வறுக்கவும்.

வறுத்த ரவை மற்றும் பட்டாணியை இறக்கிவிடவும்.

ஆறிய பின்னர் அதனுடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

10 நிமிடங்கள்ஊற வைத்து காத்திருக்கவும்.

பின்னர் இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் ஊற வைத்துள்ள மாவை ஊற்றி ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் வேகவைக்கவும்.

வெந்ததும் இறக்கி விடலாம். சுவைமிக்க ரவா இட்லி தயார்.

Categories

Tech |