ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக மண்டல இணை பதிவாளரும், மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவருமான ராஜ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் காலியாக இருக்கும் 233 விற்பனையாளர் மற்றும் 10 கட்டுநர் காலி பணியிடங்கள் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட இருக்கிறது.
இந்த தேர்வு டிசம்பர் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் நிலையில், கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 23-ம் தேதி ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இந்த அனுமதி சீட்டை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் www.drberd.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதன் பிறகு நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தங்களுடைய கல்வி தகுதி, முன்னுரிமை தகுதி, இதர தகுதிகளுக்கான அசல் சான்றிதழ், சுய கையெழுத்திட்ட 2 நகல்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விண்ணப்ப கட்டணம் செலுத்திய ரசீதின் நகல் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். மேலும் இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் தொலைபேசி நம்பரான 0424-2214378 என்ற எண்ணுக்கும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொண்டு கேட்கலாம்.