ஆற்றுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசி வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக காவல்துறையினருக்கும் வருவாய் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பச்சூர் ஆற்றுப் பகுதியில் 40 சாக்குகளில் 2 டன் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது வருவாய் துறையினருக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று ரேஷன் அரிசியை கைப்பற்றி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்