சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை காவல்துறையினர் மடக்கி பிடித்து அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் தலா 50 கிலோ எடை 35 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இதுகுறித்து லோடு ஆட்டோ டிரைவரான அம்பாசமுத்திரம் பகுதியில் வசிக்கும் அஜித் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 1 டன் ரேஷன் அரிசி மற்றும் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அதன்பின் காவல்துறையினர் ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்துள்ளனர்.