Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை….!!

லாரியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மீன் பெட்டிக்கு 120 சாக்கு மூட்டைகளில் சுமார் 6 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரக்குன்றுமாவிளைவீடு பகுதியில் வசிக்கும் அஜி, ரவிந்திரன் என்பது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் கூடுதாழை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்கள் கடத்தி வந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |