தாய்லாந்தில் 7- லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு ஒன்று புகுந்துள்ளது.
தாய்லாந்து நாட்டில் 7 லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியில் ஒரு ராட்சச உடும்பு ஒன்று அங்கிருந்த பொருட்களை அனைத்தும் தன் கனத்த உடம்பை வைத்து தள்ளி விட்டு மேலே ஏறிக்கொண்டிருந்தது. அதன் பிறகு அலமாரியின் மேலே ஏறி படுத்துக் கொண்டது. இதைப் பார்த்த சூப்பர் மார்கெட்டிற்கு வந்த அனைவரும் திகைத்தனர் .
அந்த உடும்பின் அட்டகாசம் சமூக வலைதளங்களில் பெருமளவில் பரவி வருகிறது இந்த வீடியோவை பார்க்கும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து சூப்பர் மார்க்கெட்டில் உங்களைப்போல் நானும் ஷாப்பிங் செய்ய வந்துள்ளேன் என்று கூறும் வகையில் இந்த உடும்பின் சேட்டைகள் இருப்பதுபோல் உள்ளது என்று நெட்டிசன்கள் தங்களின் கருத்தை பதிவு செய்துள்ளனர்.
https://twitter.com/zenjournalist/status/1379719584681488385