Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் கூட்டத்திற்கு நடுவில் விஜய் டிவி பிரபலம் ‘புகழ்’… வைரலாகும் வீடியோ…!!!

விஜய் டிவி பிரபலம் புகழ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது 2வது சீசன் கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த போட்டியாளர்களுக்கும் , கோமாளிகளும் பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்த புகழ் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

https://twitter.com/pugazh_iam/status/1367027244615442432

சமீபத்தில் புதிதாக கார் வாங்கிய புகழ் ‘ஆரம்பத்தில் கார் துடைக்க பணம் வாங்கிக் கொண்டிருந்த நான் இப்போது கார் வாங்கியுள்ளேன்’ என்று மகிழ்ச்சியாக கூறியிருந்தார் ‌. இந்நிலையில் சிவகாசிக்கு காரில் சென்ற புகழை சந்திக்க அவரது ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர் . மேலும் தனது ரசிகர்களை சந்தித்த வீடியோவை புகழ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |