Categories
உலக செய்திகள்

“2000 பேருக்கு பரிசோதனை” HOW IS IT POSSIBLE…? தடுப்பூசியை ஆய்வு செய்ய விருப்பம்….!!

ரஷ்ய  தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் இந்த பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் அனைத்து உலக நாடுகள் மத்தியிலும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை  உலக சுகாதார நிறுவனம் கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டு பிடிப்பதே சிரமம்.

அதற்கான காரணம் அந்த வைரஸ் தடுப்பூசிக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக் கொள்கிறது என்ற விளக்கத்தையும் அளித்தது.  இந்நிலையில் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இறுதிகட்டமாக தற்போது  2000 பேருக்கு ரஷ்யாவில் பரிசோதனை தொடங்கிய நிலையில், எப்படி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது? எப்படி சாத்தியம் ஆனது ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய நாட்டு தடுப்பூசி அந்நாட்டு அதிபர் புதின் மகளுக்கு முதன்முதலாக போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |