முன்னணி நடிகையை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா மந்தனா இந்த விஷயத்தில் முந்தியுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் புஷ்பா என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள திரையுலக பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவரை பாலோ செய்பவர்களின் வளர்ச்சி விகிதம் மற்றும் அவரின் கடைசி 25 பதிவுகளுக்கான லைக்குகள் மற்றும் கமெண்ட்டுகள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், மூன்றாவது இடத்தில் கேஜிஎஃப் யாஷ் உம் உள்ளனர். மேலும், சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றனர்.