Categories
உலக செய்திகள்

குப்பைகள் கொட்டப்படுகிறதா….? நிறம் மாறிய ஏரி…. கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்…!!

தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

அர்ஜென்டினா நாட்டில் தெற்கில் படகோனியா பகுதியில் உப்புநீர் ஏரி ஒன்று உள்ளது. இந்த பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் உப்புநீர் ஏரியில் கலப்பதனால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இந்த நிகழ்வானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியில் சோடியம் சல்பேட் என்னும் ரசாயனம் கலந்தால் தான் ஏரியானது பிங்க் நிறத்தில் மாற்றமடைந்துள்ளது. இதற்கு அப்பகுதியில் உள்ள மீன் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஏரியின் நிறம் மாறியது மட்டுமின்றி கெட்ட நாற்றமும் வீசுகிறது. இது குறித்து சுற்றுச்சூழல் ஆய்வாளர் மற்றும் வைராலஜிஸ்டுமான ஃபெடிரிக்கோ  பிரான்ஸ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் “மீன் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சோடியம் சல்பேட் என்னும் ரசாயனம் தான் ஏரியின்  நிறமாற்றத்திற்கு காரணம்” என்று கூறியுள்ளார். மேலும் மீன் தொழிற்சாலைகளில் உள்ள கழிவுகள் மற்றும் குப்பைகளை இந்த ஏரியில் கொட்டுப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சுமார் 60000 பேர் இந்த மீன் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதாகவும் இது அவர்களின் முதன்மை தொழில் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |