Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அரியவகையை சேர்ந்த ஆந்தை வனக்காப்பாளரிடம் ஒப்படைப்பு

அரிய வகை ஆந்தை ஒன்று  கண்டெடுக்கப்பட்டு வனக்காப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வந்தவாசி அருகே ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கும் அதன் அருகில் உள்ள சிறிய கடைக்கும் இடையிலுள்ள பகுதியில் அரியவகை ஆந்தை ஒன்று அமர்ந்து இருந்ததாகவும் அது பறக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் தகவல் தெரியவந்தது. இதனையடுத்து வந்தவாசி தீயணைப்பு படையினர் சுப்புராஜ் தலைமையில் வந்து பறக்க முடியாத ஆந்தையை மீட்டு தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதைனை தொடர்ந்து வனக்காப்பாளரடம் அரியவகை ஆந்தையை ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |