தமிழக அரசு அதிக விலைக்கு கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையி மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1372ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கையானது 283லிருந்து 365ஆக உயர்ந்துள்ளது. மேலும் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக நடைபெறுகிறது என்றும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.
ஆய்வக வசதியை அதிகப்படுத்தி பரிசோதனை செய்யும் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் 3 ஆய்வகங்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. மொத்தம் 31 ஆய்வகங்கள் இயங்குகின்றன. நாட்டிலே தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை மையங்கள் உள்ளன என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வங்கியுள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பரிசோதனை கருவிகள் எவ்வளவு வந்துள்ளது, அதன் விலை என்ன? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இதனிடையே மத்திய அரசு வாங்கிய விலையிலேயே மாநில அரசும் ரேபிட் கருவிகளை ஆர்டர் செய்துள்ளது என மருத்துவ சேவைக்கழக வேளாண் இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார். ரேபிட் கருவிகள் வாங்குவதற்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்யவில்லை எனவும் அவர் கூறினார்.