Categories
மாநில செய்திகள்

மத்திய அரசின் அனுமதி அளித்த விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

மத்திய அரசின் அனுமதி அளித்த விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ரேபிட் கருவிகளை ரூ.400க்கு மிகாமல் நிறுவனங்கள் விற்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் 245 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் பரிசோதனை கருவிகளை தமிழக அரசு ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அரசின் ஐசிஎம்ஆர் அனுமதி அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது என கூறியுள்ளார். ரேபிட் கிட்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர் மட்டுமே இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், தமிழக அரசு பெற்றுள்ள 24,000 கிட்கள் திரும்ப அனுப்பப்படுகின்றன.

இதனால் தமிழக அரசுக்கு எந்த செலவினமும் ஏற்படவில்லை. எஞ்சியுள்ள கொள்முதல் ஆணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என விளக்கம் அளித்துள்ளார். மேலும் நாட்டிலேயே அதிகளவு தமிழகத்தில் தான் கொரோனா நோயில் இருந்து சுமார் 56.8% பேர் குணமாகி திரும்பியுள்ளனர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி அரசியல் லாபம் அடையும் முயற்சியை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |