ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சால் பாராளுமன்ற அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 18ஆம் தேதி தொடங்கப்பட்ட பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நிறைவேற்றப்படாத பல மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி இந்திய பெண்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக கூறி பாஜக எம்பிக்களான ஆன ஸ்மிரிதி இராணி லாலா சாட்டர்ஜி ஆகியோர் அமளியில் ஈடுபட்டனர்.
அவர்கள் ராகுல் காந்தி மீது வைத்த குற்றச்சாட்டானது, மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ரேப் இன் இந்தியா என்று ராகுல்காந்தி பேசியதாகவும் அதற்காக அவர் தற்போது இந்த பாராளுமன்ற அவையில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பேசினார்.
பின் அவ்வாறு அவர் கூறியது இந்திய பெண்களை அவமதிப்பதாகவும், இந்திய பெண்கள் வண்கொடுமை செய்யப்படவேண்டும் என்ற வகையில் இருப்பதாகவும் ஸ்மிருதி இரானி புகார் அளிக்க நாடாளுமன்ற அவையில் சலசலப்பு ஏற்பட பின் இரண்டு பேரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மாநிலங்களவை இரண்டும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.