ராணுவ விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்சில் உள்ள sulu மாகாணத்தில் Cagayan de Oro என்ற பகுதியிலிருந்து 85 ராணுவ வீரர்கள் உட்பட 92 பேருடன் C130 என்ற ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது . அப்போது Jolo விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து Patikul என்ற நகரில் உள்ள கிராமத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த இராணுவ வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
https://twitter.com/HitNewsIndia/status/1411583343095738369
இந்த விமானம் விபத்துக்குள்ளானதை அந்நாட்டு இராணுவ தளபதி Cirilito Sobejana உறுதிப்படுத்தினார். இந்த விபத்தில் மீட்கப்பட்ட 40 பேரை Jolo-வில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ தளபதி மேஜ்ர் ஜெனரல் William Gonzales தெரிவித்துள்ளார். மேலும் இந்த விமான விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
https://twitter.com/dReyDreymz0810/status/1411553943373565953