ராணுவ சேமிப்புக் கிடங்கில் சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய கஞ்சா செடிகள் வளர்ப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
பிரிட்டனில் Northamptonshire என்ற இடத்தில் முன்னாள் ராணுவ சேமிப்பு கிடங்கு ஒன்று அமைந்துள்ளது .இங்கு ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற கருவிகளை பழுது பார்க்கும் இடமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர் .மேலும் இந்த கஞ்சா செடிகளை அளிப்பதற்காக ஒரு நாள் முழுவதும் செலவிட வேண்டி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.