Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“100 சதவீத வாக்குப்பதிவு” ரங்கோலி விழிப்புணர்வு…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி ரங்கோலி, இருசக்கர வாகனப் பேரணி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள கல்குறிச்சி ஊராட்சியில் இருசக்கர வாகனப் பேரணி, ரங்கோலி மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் கணேசன் முன்னிலை வகிக்க அனைத்து ஊராட்சி செயலாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |