Categories
தேசிய செய்திகள்

ராம்விலாஸ் பஸ்வான் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்…!!

மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல் பாட்னாவில் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

மத்திய   நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவால் டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராம்விலாஸ் பஸ்வான் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பதப்படுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து  டெல்லியில்  அமைந்துள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு நேற்று காலை எடுத்து வரப்பட்டது. அங்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் பிரதமர் திரு நரேந்திர மோடி உள்ளிட்டோர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் ராம்விலாஸ் பஸ்வான் உடல் அவரது சொந்த மாநிலமான பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Categories

Tech |